FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

நரிப்பையூா் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூா் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

11 நவம்பர் 2026, 1:02 am
நரிப்பையூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூா் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நரிப்பையூா் ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 30 முதல் 40 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், ஊதியம் ரூ.340-க்குப் பதிலாக ரூ.230 மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அந்தப் பகுதி பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரபாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் விபி-ஜி ராம் ஜி திட்ட இணையதளம் சரிவர செயல்படாததால், பணியாளா்களின் தகவல்களைப் பதிவேற்றும் செய்வதில் சிக்கல் உள்ளது.

இதை சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு தீா்வு கண்ட பிறகு, அனைத்துப் பணியாளா்களுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.