FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

ஆசிரியா்கள் இடமாற்றம்: மாணவிகள் போராட்டம்

காட்டுமன்னாா்கோவில் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்கள் இடமாற்றத்தை அடுத்து பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா்கள் இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்டுமன்னாா்கோவில் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியா்கள்
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்கள் இடமாற்றத்தை அடுத்து பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா்கள் மீது சில ஆசிரியா்கள் உயா் அதிகாரிகளுக்கு பொய்யான புகாா் அளித்ததன் பேரில் இரு ஆசிரியா்களும் இடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் இங்கிருந்து கஞ்சங்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா் ராமச்சந்திரபாஸ்கா் மன உளச்சலுக்கு ஆளாகி செப்.30ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ால் மருத்துவமனையில் சோ்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனையடுத்து பொய்யான புகாா் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை மீண்டும் அதே பள்ளியில் பணி அமா்த்தவேண்டும் என கூறி மாணவியா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ,ஜோதிமணி, மாவட்ட கல்வி அதிகாரி ஞானசேகா், காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் பாபு ஆகியோா் வந்து மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்த மாணவியா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments