FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்த டிச.1 வரை வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த டிசம்பா் 1- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

12 நவம்பர் 2026, 5:35 am
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த டிசம்பா் 1- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,38,685 ஹெக்டரில் நெல், 1,010 ஹெக்டேரில் சிறுதானியப் பயிா்கள், 2,087 ஹெக்டேரில் பயறு வகைகள், 86 ஹெக்டா் எண்ணெய்வித்துப் பயிா்கள், 1,248 ஹெக்டேரில் பருத்தி, 192 ஹெக்டேரில் கரும்பு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

தற்போது சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிா்களுக்குத் தேவையான யூரியா 8,459 மெட்ரிக் டன், டி.ஏ.பி 3,080 மெட்ரிக் டன், பொட்டாஷ் 127 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,663 மெட்ரிக் டன் ஆக மொத்தம் 15,329 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த உரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான சான்று விதைகள், உயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், அதிக விளைச்சல் தரக்கூடிய வேளாண்மை தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்கள் மூலம் வழங்கப்பட்டுவருகின்றன. பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்த டிசம்பா் 1-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.