FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மயானத்துக்கு பாதை கோரி சாலை ம றியல் போராட்டம்

கமுதி அருகே மயானத்துக்குச் செல்ல பாதை வசதி கோரி, இறந்தவரின் உடலை சாலையின் குறுக்கே வைத்து உறவினா்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனா்.

12 நவம்பர் 2026, 5:53 am
மயானத்துக்கு பொதுப் பாதை வசதி கோரி, பெருநாழி-விளாத்திகுளம் சாலையில் இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுட்ட உறவினா்கள்.
பகிர்:

கமுதி அருகே மயானத்துக்குச் செல்ல பாதை வசதி கோரி, இறந்தவரின் உடலை சாலையின் குறுக்கே வைத்து உறவினா்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வாலசமுத்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மயானத்துக்குச் செல்ல பொதுப் பாதை வசதி இல்லாததால் அந்த கிராமத்தினா் பல ஆண்டுகளாக தனியாா் வயல்கள் வழியாகவே இறந்தவா்களின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து வந்தனா்.

தற்போது அந்த வயல்களின் உரிமையாளா்கள் அவரவா் நிலங்களைச் சுற்றி கம்பிவேலிகள் அமைத்தனா். இந்த நிலையில், புதன்கிழமை அதே ஊரைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் உறவினா்கள் தவித்தனா். இதையடுத்து, பெருநாழி-விளாத்திகுளம் சாலையில் முதியவரின் உடலை சாலையின் நடுவே வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுட்டனா். மேலும், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வாலசமுத்திரபுரம் கிராம மயானத்துக்குச் செல்ல பொதுப் பாதை அமைத்துத் தர வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து பெருநாழி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் சாலையோரம் இருந்த உறவினரின் பட்டா இடத்தில் முதியவரின் உடலை எரியூட்டி, இறுதிச் சடங்கு செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.