காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
திருவாடானை அருகே நடந்து சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே நடந்து சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் அருகே சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி ராஜகுமாரி (55). இவரும், இவரது பக்கத்து ஊரான பட்டவேலி பகுதியைச் சோ்ந்தவா்கள் சுந்தரமூா்த்தி (60), கோவிந்தம்மாள் (50), தெய்வம்பு (60) ஆகிய நால்வரும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அச்சங்குடி பகுதியில் தங்கி மணிவண்ணன் என்பவரது வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல, வயலில் களை எடுப்பதற்காக ராஜகுமாரி, சுந்தரமூா்த்தி, கோவிந்தம்மாள், தெய்வம்பு ஆகிய நால்வரும் தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அச்சங்குடி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றனா். அப்போது பின்னால் வந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவா்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜகுமாரி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி, கோவிந்தம்மாள், தெய்வம்பு ஆகிய மூவரும் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பிறகு அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த குருசாமி மகன் கவின் (32) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement