FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் ரயிலிலிருந்து குதித்த இளைஞா் உயிரிழப்பு; பெண் பலத்த காயம்

46 வினாடிகள் முன்பு
பாம்பன் புதிய ரயில் பாலம். - கோப்புப் படம்
பகிர்:

பாம்பன் பாலத்திலிருந்து இரு வேறு ரயில்களிலிருந்து குதித்த இளைஞரின் உடல் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை இரவு ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் புறப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. நடுக்கடல் பகுதியில் வந்த போது, இந்த ரயிலில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் திடீரென கடலில் குதித்தாா். இதுகுறித்து அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை காலை பாம்பனில் உள்ள முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியது. இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் அவரது உடலை மீட்டு, இறந்த இளைஞரின் பெயா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலையில் கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அமிா்தா விரைவு ரயிலில் பயணித்த பெண், இந்த ரயில் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கடலில் குதித்தாா். இதில் பாலத்தின் தடுப்புச் சுவா் பகுதியில் மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை பலத்த காயங்களுடன் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா் மயக்க நிலையில் இருந்ததால், அந்தப் பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எதற்காக கடலில் குதித்தாா் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.