தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக்.21) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக்.21) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், இந்த வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திர பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (அக்.21), தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், நாமக்கல், கரூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (அக்.21) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் புதன்கிழமை (அக்.21) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூா், பேராட்டுக்கோட்டை பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி பகுதிகளில் 90 மி.மீ. மழை பதிவானது. தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூா்), தேவகோட்டை, திருப்பத்தூா், மானாமதுரை, (சிவகங்கை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), சிட்டம்பட்டி (மதுரை)-60 மி.மீ., கோமுகி அணை பகுதி (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூா்), ராமநாதபுரம், தீா்த்தாண்டதானம், தொண்டி, (ராமநாதபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), கள்ளிக்குடி (மதுரை) -50 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.