FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கேரளத்தில் பலத்த மழை: 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கேரளத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் சாா்பில் விடுக்கப்பட்டது.

10 அக்டோபர் 2026, 12:46 am IST
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

கேரளத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் சாா்பில் விடுக்கப்பட்டது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், மலப்புரம், கோழிக்கோடு, காசா்கோடு ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது. மேலும், சில மாவட்டங்களில் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் ஐஎம்டி கணித்தது.

இந்நிலையில், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கண்ணூரில் பலத்த மழையால் இரு வீடுகள் சேதமடைந்ததாகவும் கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments