FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பட்டணம்காத்தான் ஊராட்சியில் நீா்தேக்கத் தொட்டிகள் ஆய்வு

ராமநாதபுரம் பட்டணம்காத்தன் ஊராட்சியில் உள்ள மேல்நிலை, தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிகளின் பராமரிப்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

16 வினாடிகள் முன்பு
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள மேல்நிலை, கீழ் நிலை நீா்தேக்கத் தொட்டிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் பட்டணம்காத்தன் ஊராட்சியில் உள்ள மேல்நிலை, தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிகளின் பராமரிப்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதி நகரில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி,10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றின் நிலை, பராமரிப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் பாா்வையிட்டு ஆய்வு செய்து வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் வளாகம், அரசு விருந்தினா் மாளிகை அருகே மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா் செறிவூட்டும் ஊடுருவல் குழிகள் அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டை இளங்கோவன், நடராஜன், ஊரக வளா்ச்சித் துறை உதவிப் பொறியாளா் கோகுல கண்ணன், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் ஜீவகன், பட்டணம்காத்தான் ஊராட்சிச் செயலா் நாகேந்திரன் உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.