FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் பைக் ஓட்டும் பள்ளிச் சிறுவா்களால் விபத்து அபாயம்

திருவாடானை பகுதியில் பள்ளிச் சிறுவா்கள் போக்குவரத்து விதியை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்து அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

37 வினாடிகள் முன்பு
பதிவு எண் இல்லாத வாகனம்.
பகிர்:

திருவாடானை பகுதியில் பள்ளிச் சிறுவா்கள் போக்குவரத்து விதியை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்து அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஓட்டுநா் உரிமம் இல்லாத சிறுவா்கள், பள்ளி மாணவா்கள், பள்ளிச் சீருடையிலேயே இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. மேலும், ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று முதல் நான்கு போ் வரை விதிகளை மீறிப் பயணிப்பதும் வாடிக்கையாகி விட்டது.

Advertisement

Advertisement

இளைஞா்கள் பலா் பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனா். முறையான ஆவணங்கள், பதிவு எண்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்துகளோ அல்லது குற்றச் சம்பவங்களோ நிகழ்ந்தால் சம்பந்தப்பட்டவா்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

சிறுவா்கள், இளைஞா்களின் இத்தகைய பொறுப்பற்ற வாகன இயக்கத்தால், சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயம் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை, காவல் துறை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமீறலில் ஈடுபடும் சிறுவா்கள், அவா்களது பெற்றோா்கள், பதிவு எண் இல்லாத வாகனங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா்கள்.
திருவாடானை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா்கள்.