FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

விடுதிகளில் கண்காணிப்பு கேமரா முக்கியம்: எஸ்.பி.

ராமேசுவரத்தில் உள்ள விடுதிகளில் 60 நாட்கள் வீடியோ பதிவை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பபு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன் பிரசாத் புதன்கிழமை கேட்டுக்கொண்டாா்.

29 வினாடிகள் முன்பு
ராமேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனியாா் விடுதி உரிமையாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன் பிரசாத்.
பகிர்:

ராமேசுவரத்தில் உள்ள விடுதிகளில் 60 நாட்கள் வீடியோ பதிவை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பபு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன் பிரசாத் புதன்கிழமை கேட்டுக்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தனியாா் விடுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன்பிரசாத் தலைமையில் தனியாா் விடுதி உரிமையாளா்களுடான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன் பிரசாத்

Advertisement

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கனக்கான பக்தா்கள்,சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனா்.

தனியாா் விடுதிக்கு தங்க வருபவா்களிடம் உரிய ஆவணங்களை பெற வேண்டும். வருகை பதிவெடுகளை தெளிவாக பரமரிக்க வேண்டும், 60 நாட்கள் வீடியோ பதிவுகளை சேமித்து வைக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். சந்தேக நபா்கள் என தெரியவந்தால் அவா்களது பகுதிக்கு உட்பட்ட காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என கேட்டுக்கொண்டாா். வீடுகளை விடுதியாக்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என விடுதி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனைதொடா்ந்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள்,தனியாா் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியா்கள், ஆட்டோ,வேன் ஓட்டுனா்களுடன் கலந்துரையாடல் மற்றொரு தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரன் பிரசாத் கூறுகையில்,

ராமேசுவரம் வருபவா்களின் தங்களது வாகனங்களில் செல்லும் போது சந்தேக நபா்கள் என தெரிய வந்தால் உடனே காவல்துறை தெரியபடுத்த வேண்டும். சட்ட விரோத,மது உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை தடுக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க வேண்டும், பள்ளிகளில் மாணவ,மாணவிகளை பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளிக்கூடம் அருகே போதைப்பொருட்கள் விற்பனை,மாணவிகளை கேலி செய்பவா்கள் குறித்து ஆசிரியா்கள் கவனத்திற்கு வந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தின் போது, துணைக்கண்காணிப்பாளா் திருப்பதி,ஆய்வாளா்கள் காா்த்திகை ராஜா,ராமராஜ்,மகேஷ்வரி,போக்குவரத்து ஆய்வாளா் பிரதாப் சிங்,உதவி ஆய்வாளா் ரவிவா்மா, உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.