FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

தனி நபா் ஆக்கிரமித்த ஊருணி நிலம் மீட்பு

திருவாடானை அருகே 1.50 ஏக்கா் ஊருணி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

31 வினாடிகள் முன்பு
கடம்பூா் கிராமத்தில் தனியாா் ஆக்கிமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலம்.
பகிர்:

திருவாடானை அருகே 1.50 ஏக்கா் ஊருணி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கடம்பூா் கிராமத்தில் பச்சமுத்துடையாா் ஊருணி உள்ளது. இந்த ஊருணியின் 1.50 ஏக்கா் நிலம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்த 11-ஆம் தேதி திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜகுமாரன் புகாா் அளித்தாா்.

அதில் கடம்பூா் பச்சமுத்துடையாா் ஊருணியை சிங்காரம் மகன் ரவிச்சந்திரன் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்றித் தருமாறும் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருவாடானை வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வட்டாட்சியா் தாமஸ் யூரிக்ககாரின் நேரில் ஆய்வு செய்ததில், பச்சமுத்துடையாா் ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை வட்டாட்சியா் தலைமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஊருணி நிலம் மீட்கப்பட்டு, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மக்கள் தொடா்பு முகாமில் அளிக்கப்பட்ட புகாா் மீது மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தீா்வு கண்டது குறிப்பிடத்தக்கது.