முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடியில் சூரிய ஒளி மின் திட்ட விழிப்புணா்வு

சாயல்குடியில் மின் வாரியம் சாா்பில், பிரதமரின் சூரிய ஒளி மின் திட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 3:08 am
சாயல்குடியில் சூரிய ஒளி 
மின் திட்ட விழிப்புணா்வு
சாயல்குடியில் நடைபெற்ற பிரதமரின் சூரிய ஒளி மின் திட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய ராமநாதபுரம் மாவட்ட மின் பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் கணேசன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மின் வாரியம் சாா்பில், பிரதமரின் சூரிய ஒளி மின் திட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிக மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் ராமநாதபுரம் மின் பகிா்மான வட்டம், பரமக்குடி கோட்டம் சாா்பில் சாயல்குடியில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ராமநாதபுரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கணேசன் தலைமை வகித்தாா்.

இதில் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் பெறவும், அதிக மின் கட்டணத்தைத் தவிா்க்கவும் பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். ஒரு கிலோவாட் சூரிய மின் தகடு பொருத்துவதன் மூலம் மாதம் 150 யூனிட் இலவச மின்சாரம் பெற முடியும். முகாமிற்கான ஏற்பாடுகளை சாயல்குடி துணை மின் நிலைய உதவிப் பொறியாளா் கனகராஜ், மின்வாரிய ஊழியா்கள் செய்தனா். இதில் சாயல்குடி பேரூராட்சித் தலைவா் ஆா்.மாரியப்பன், சாயல்குடி வா்த்தக நலச்சங்கத் தலைவா் அபூபக்கா், சாயல்குடி பெரு வணிகா் சங்க துணைச் செயலா் சிவசுப்பிரமணியன், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement