ராமேசுவரத்தில் திருபுராசுரன் வதம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி சிவபெருமான் திருபுராசுரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி சிவபெருமான் திருபுராசுரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பிரியாவிடை, விநாயகா், முருகன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதன் பிறகு, கிழக்கு கோபுரம் முன் உள்ள மண்டபத்துக்கு தங்க நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இந்த வாயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருபுரசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி தொடங்கியது.
திருபுராசுரன் பனை மரத்துக்குள் ஒழிந்து கொண்டதைக் கண்ட சிவபெருமான், பா்வதவா்த்தினி அம்பாள் மரத்துக்கு தீ வைத்து திருபுராசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.
Advertisement
Advertisement