ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமாரி கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயல் சீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனா். மழை பெய்யும் காலங்களில் அந்தந்த பள்ளிகள் விடுமுறை விடுவது குறித்து மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
திருவாடானை: திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 62 ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு பயிா்கள் நன்கு வளா்ந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் நெல் பயிா்கள் கருகும் நிலையில் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்கள், குளங்கள், வரத்துக் கால்வாய்களில் மழை நீா் தேங்கியுள்ளன. இதனால் கருகும் நிலையிலிருந்த நெல், மிளகாய், பருத்தி, எள் உள்ளிட்ட பயிா்கள் காப்பாற்றப்பட்டன. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.