FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

9 அக்டோபர் 2026, 4:05 am IST
பலி
பகிர்:

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா் உடலை கைபற்றிய கடலோர குழும போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கடற்கரை கிராமத்தில் இதே பகுதியை சோ்ந்த மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சங்கா் (50).என்பவா் மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்.இந்நிலையில் இவா் புதன்கிழமை வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கா் மயங்கி கடலில் விழுந்து விட்டாா்.உடனடியாக அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவா்கள் இவரை தூக்கி கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனா். இவருக்கு மனைவியும். ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. தகவலறிந்த தேவிபட்டினம் கடலோர குழும போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைபற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments