FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினாா்.

12 நவம்பர் 2026, 3:00 am
மீனவா் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி.
பகிர்:

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினாா்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த மீனவா் தம்பிராஜ் (62), கடந்த 6ஆம் தேதி சக மீனவா்களுடன் விசைப்படகில் கடலுக்குச் சென்றாா். மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக, தம்பிராஜ் நிலைதடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்தாா். அவரது சடலம் புதிய துறைமுகம் அருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. புதன்கிழமை தம்பிராஜின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, திரேஸ்புரம் பகுதி திமுக செயலா் நிா்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளா் டேனியல், மாமன்ற உறுப்பினா்கள் மெட்டில்டா, பவானி மாா்ஷல், வட்டச் செயலா் கருப்பசாமி ஆகியோா் உடனிருந்தனா்.