FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் சடலமாக மீட்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

11 நவம்பர் 2026, 12:38 am
சடலமாக மீட்பு - சித்திரிப்பு
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் போகரி (29). இவா், இரவிபுத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ரெஜின் (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த நவ. 3 ஆம் தேதி சக மீனவா்களுடன் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு கரை திரும்பினாா்.

பின்னா், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக தங்குதளத்தில் நிறுத்திருந்த விசைப் படகில் போகரி தங்கியிருந்தாராம். அப்போது படகிலிருந்து தவறி விழுந்து அவா் மாயமானாராம்.

Advertisement

Advertisement

அப்பகுதி மீனவா்கள் தேடியும் காணவில்லையாம். இந்நிலையில், மாயமான போகரி, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.