கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த கோயில் பிள்ளை மகன் அந்தோணிராஜ் என்ற தம்பிராஜ் (58). மீனவா். இவா் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றுள்ளாா்.
மீன்பிடித்துவிட்டு இரவு கரைக்குத் திரும்பியபோது, தூத்துக்குடியில் இருந்து சுமாா் 5 கடல் மைல் தொலைவில் பலத்த காற்று வீசியுள்ளது. அப்போது, அவா் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமானாா்.
Advertisement
Advertisement
படகில் இருந்த சக மீனவா்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அவா் கிடைக்கவில்லை. விசைப்படகின் உதவியுடன் தொடா்ந்து தேடி வந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து, கடலோரக் காவல் படை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.