தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் தீபாவளிப் பண்டிகையைத் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் தொழிலுக்கு ஓய்வுகொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமாா் 272 விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தீபாவளிப் பண்டிகை விடுமுறை முடிந்ததும் திங்கள்கிழமை முதல் (நவ.9) விசைப்படகு மீனவா்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement