FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விசைப் படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

24 செப்டம்பர் 2026, 4:41 am IST
விசைப்படகுகள். - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் மத்திய மேற்கு, அதை ஒட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது, மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலையில் விசாகப்பட்டினம்-கோபால்பூா் இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் வகையில், 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments