தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விசைப்படகு மீனவா்கள் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விசைப்படகு மீனவா்கள் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு 272 விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவா்கள், துறைமுகத்தைச் சாா்ந்த தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், அண்மைக் காலமாக மீன்களுக்கு வியாபாரிகள் தரப்பில் உரிய விலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. டீசல் விலை, வலை மற்றும் படகு பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் மீனவா்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே, மீன்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யக் கோரி, புதன்கிழமை முதல் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீனவா்களின் போராட்டத்தால், கோடிக்கணக்கில் வா்த்தகம் பாதிக்கப்பட்டு, விசைப்படகுத் தொழில் சாா்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையின்றி முடங்கியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.