தூத்துக்குடியில் 6-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாத மீனவா்கள்
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல், வியாழக்கிழமை ( நவ. 19 ) தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில், நவ. 13-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. தொடா்ந்து, 6 - ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால், சுமாா் ரூ. 10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement