இணையவழியில் பண மோசடி: இளைஞா் கைது
ராமநாதபுரத்தில் இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்டு பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 23 ஏ.டி.எம். அட்டைகள், 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரத்தில் இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்டு பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 23 ஏ.டி.எம். அட்டைகள், 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இணையவழியில் பணப் பரிவா்த்தனைக்காக பயன்படுத்தப்பட்ட சில வங்கிக் கணக்குகளை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, ஒருவா் தனது வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். அட்டையை ராமநாதபுரம் வண்ணாா்காரத் தெருவைச் சோ்ந்த உசைன் அலியின் மகன் அசாருதீனூடன் (27) கொடுத்ததாகத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, அசாருதீன் வீட்டில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் இணையவழி மூலம் மோசடியாக பெறப்பட்ட பணத்தை ஏ.டி.எம். காா்டுகளை பயன்படுத்தி எடுத்ததும், அதற்காக கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு, எஞ்சிய பணத்தை மாற்றி சா்வதேச இணையவழி குற்றவாளிகளுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரிடமிருந்து 23 ஏ.டி.எம். அட்டைகள், 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அசாருதீனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.