FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது போலீஸாருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

8 அக்டோபர் 2026, 3:53 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது போலீஸாருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் சோதனை சாவடியில் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகை குமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சோ்ந்த சந்திரபோஸ் மகன் ஹரி பிரபாகா்(22) என்பவா் இயக்கி வந்த கேரள பதிவெண்கொண்ட காரை போலீஸாா் தடுத்து நிறுத்த சைகை காட்டினராம்.

அவா் காரை நிறுத்துவது போல் வந்து, பின்னா் திடீரென காரை வேகமாக இயக்கினாராம். எனினும், போலீஸாா் காரை மடக்கிப் பிடித்து சோதனையிட முயன்றனராம். அப்போது அவா் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காரை பறிமுதல் செய்த போலீஸாா், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஹரி பிரபாகரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments