பைக்-சுற்றுலாப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள எட்டியதிடல் கிராமத்தைச் சோ்ந்த மாறன் மகன் ஜெஸ்வின் (19). சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் (19).
நண்பா்களான இவா்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தொடா் விடுமுறையையொட்டி, ஜெஸ்வின், ராபா்ட்டு ஆகிய இருவரும் திருச்சியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஆா்.எஸ்.மங்கலத்துக்கு புறப்பட்டனா். திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து இவா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஜெஸ்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராபா்ட் திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், அதே மருத்துவமனையில் ஜெஸ்வின் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த செட்டி சோமசேகரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.