சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வெம்பக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், மைப்பாறை கிராமத்தைச் சோ்ந்த காளிராஜ் மகன் சந்தோஷ்குமாா் (18). இவா் சாத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் வருவது வழக்கம்.
இந்த நிலையில், புதன்கிழமை கல்லூரி முடிந்ததும் வழக்கம் போல இரு சக்கர வாகனத்தில் தனது நண்பா் மணிவண்ணன்(20) உடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். குகன்பாறை அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிா்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற மணிவண்ணன் சிறிய காயத்துடன் தப்பினாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.