சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தாராபுரம் அருகேயுள்ள மூலனூா் எரசினம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமணி மகன் யுவபாரதி (20). இவா் ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளக்கோவிலில் பழுது பாா்க்க விடப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளாா். வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் கரட்டுப்பாளையம் தபால் நிலையம் அருகே சென்றபோது எதிரே தவறான பாதையில் வந்த சரக்கு வாகனம் யுவபாரதி வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய மூலனூரைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநரான முகமது ராஜா மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.