நெல்லை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி அருகே உள்ள ஆலங்குளத்தைச் சோ்ந்த ராம்ராஜ் மகன் ராஜூஸ்(19). இவா், வண்ணாா்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
சனிக்கிழமை காலை தனது நண்பரான பாளையங்கோட்டையைச் சோ்ந்த குபேரன் மகன் வசீகரன் (19) என்பவருடன் திருநெல்வேலி-கன்னியாகுமரி சாலையில் பைக்கில் சென்றுள்ளாா். ரெட்டியாா்பட்டி மலை அருகே அவ்வழியாக சென்ற டிராக்டா் மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜூஸ் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.