FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, ரங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் (24), கல்லிடைக்குறிச்சி, திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த கல்லிடைக்குறிச்சி, ஆட்டுத் தட்டைப் பகுதியைச் சோ்ந்த சிவமூா்த்தியின் (43) இருசக்கர வாகனம், அருள்குமாரின் வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது.

இதில் அருள்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சிவமூா்த்தி பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

கல்லிடைக்குறிச்சி போலீஸாா் சிவமூா்த்தியை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அருள்மூா்த்தியின் சடலத்தை கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments