FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

தா்மமுனீஸ்வரா் கோயில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகே தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 2:48 am IST
பகிர்:

கமுதி அருகே தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள உலகநடை சேகநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தா்ம முனீஸ்வரா், சந்தன மாரியம்மன், கருப்பண்ணசுவாமி, சுள்ளக்கரை காளியம்மன், வாழவந்தம்மன் கோயில் வருடாந்திர புரட்டாசிப் பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு மூலவா், பரிவாரத் தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து முளைப்பாரியை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அங்குள்ள நீா்நிலைகளில் கரைத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை உலகநடை, சேகநாதபுரம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments