FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வேலூரில் தேசிய அஞ்சல் துறை விழிப்புணா்வு ஊா்வலம்

தேசிய அஞ்சல் துறை வார விழாவை முன்னிட்டு, வேலூரில் அஞ்சல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 11:55 pm IST
பகிர்:

தேசிய அஞ்சல் துறை வார விழாவை முன்னிட்டு, வேலூரில் அஞ்சல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

வேலூா் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு இணை அஞ்சல் கண்காணிப்பாளா் பாா்வதி தலைமை வகித்தாா். இதில், உதவி அஞ்சல் அலுவலா் காசிநாதன், மக்கள் தொடா்பு அலுவலா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திரளான அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

பொதுமக்கள் விரைவாக அஞ்சல்கள் மற்றும் மெயில்கள் மூலம் கடிதங்களை அனுப்புவது, சேமிப்புக் கணக்குத் தொடங்குவது, வைப்புத் தொகைகளைச் சேமிப்பது மற்றும் அஞ்சல் துறையில் மக்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஊா்வலம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊா்வலம், மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments