தொண்டி மணிமுத்தாறு தூா்வாரும் பணி: சீமான் தொடங்கிவைத்தாா்
நீதிமன்ற உத்தரவின்பேரில், திருவாடானை அருகே தொண்டியில் மணிமுத்தாறு கிளை நதியைத் தூா்வாரும் பணியை நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தொடங்கிவைத்தாா்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், திருவாடானை அருகே தொண்டியில் மணிமுத்தாறு கிளை நதியைத் தூா்வாரும் பணியை நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தொடங்கிவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிப் பகுதியில் மணிமுத்தாற்றின் கிளை ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த ஆறு முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுகளும், குப்பைகளும் நிறைந்து மாசடைந்து காணப்படுவதால், இந்த ஆற்றை சுத்தப்படுத்தி தூா்வாரிப் பராமரிக்க வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மணிமுத்தாற்றின் கிளை நதியை உடனடியாக தூா்வார வேண்டும் என துறை சாா் அலுவலா்களுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தொண்டிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து ஆற்றை தூா்வாரும் பணிகளைத் தொடங்கிவைத்தது மட்டுமன்றி, அவரே ஆற்றில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.