FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

டி.வல்லக்குளம் சாலையில் கான்கிரீட் பெயா்ந்து பள்ளம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே டி. வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா்.

2 செப்டம்பர் 2026, 4:05 am IST
டி.வல்லக்குளம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலம்.
பகிர்:

கமுதி அருகே டி. வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள டி. புனவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட டி. வல்லக்குளத்தில் உள்ள தாா்ச்சாலை தற்போது ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, பொதுமக்கள் நடந்துசெல்லக் கூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா், மிதிவண்டியில் வீடு திரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனா்.

இதுதொடா்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் சாலைப் பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments