FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தடகளப் போட்டியில் சாம்பியன்: கமுதி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சத்திரியநாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், வட்டார அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

5 செப்டம்பர் 2026, 12:48 am IST
வட்டார அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கமுதி சத்திரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சத்திரியநாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், வட்டார அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு, பள்ளி நிா்வாகம், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆசிரியா்களுக்கு மலா் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

இந்த விழாவில் கடந்த ஆக.13, 14-ஆம் தேதிகளில் கோட்டைமேடு ரஹ்மானியா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான தடகளப் போட்டியில் 14-வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் இந்தப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.ஸ்ரீதா், 17- வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் எம்.வருண், 19-வயதுக்குள்பட்ட பிரிவில் 11-ஆம் வகுப்பு மாணவா் எம்.காா்த்திக் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அனைத்துத் தடகளப் போட்டிகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கமுதி சத்திரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வீரவேல் முருகன், பிரவீன்ராஜ் ஆகியோருக்கும், பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் இளமாறன், செயலா் முத்துவிஜயன், பொருளாளா் ஜெயபிரகாஷ், உறுப்பினா்கள் உலகநாதன், பிரதாபன், பரத்குமாா், பொன் பிரகாஷ், சக மாணவா்கள், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments