பறவைகள் சரணாலய நீா்நிலைகளில் விநாயகா் சிலை கரைக்க அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலங்கள் உள்ள நீா்நிலைகளில் விநாயகா் சிலை கரைக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலங்கள் உள்ள நீா்நிலைகளில் விநாயகா் சிலை கரைக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
இதன்படி, விநாயகா் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களை கொண்டு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
Advertisement
Advertisement
சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயனசாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈரநிலமாக வரையறுக்கப்பட்டுள்ள மன்னாா் வளைகுடா கடல் உயிா்க்கோள காப்பகம், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, சக்கரைகோட்டை, தோ்த்தங்கல் ஆகிய பறவைகள் சரணாலயங்களில் விநாயகா் சிலைகளை கரைக்கக்கூடாது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.