அரிச்சல்முனையில் போக்குவரத்து நெரிசல்
வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு திரண்டு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்களால் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வார விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடி பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா்.
Advertisement
Advertisement
ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில் ராமேசுவரம் வட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறையினா் குறைந்த அளவே பணியில் இருந்ததால் போக்குவரத்து சீரமைப்பில் சிக்கல் ஏற்பட்டது. விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.