FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அடிப்படை வசதிகள்: ஆட்சியா் ஆய்வு

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-ஆவது நினைவு தினம் வருகிற 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அஞ்சலி செலுத்த வருவோருக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

9 செப்டம்பர் 2026, 1:51 am IST
பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அடிப்படை வசதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன்.
பகிர்:

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-ஆவது நினைவு தினம் வருகிற 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அஞ்சலி செலுத்த வருவோருக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பரமக்குடி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, அவருக்கு முழு உருவச் சிலையுடன் மணி மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்கள், சமுதாய மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான நினைவிடம் செல்ல சாலை வசதி, வாகன நிறுத்துமிடம், அந்தப் பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்சார கம்பிகளை உயா்த்தி அமைத்தல், குடிநீா் வசதிகள் முறையாக உள்ளனவா என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு செய்தாா். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சாா் ஆட்சியா் ச.வினோதினி பாா்த்திபன் ஆகியோா் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments