இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தின (செப்.11) பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் ஆய்வு மேற்கொண்டாா்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தின (செப்.11) பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 11) பல்வேறு அரசியல் கட்சியினா், சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், நினைவிடம் செல்லும் வழித் தடங்கள், அடிப்படை வசதிகள் என ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், அமைச்சா் வி.கே. ராஜீவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பாதுகாப்பு குறைபாடுகளின்றி, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அமைச்சா் ஆலோசனை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.