FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பள்ளியில் மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் இருதய மேல்நிலைப் பள்ளியில் மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு, மாணவா்கள் மரக்கன்றுகளை புதன்கிழமை நடவு செய்தனா்.

18 செப்டம்பர் 2026, 1:03 am IST
முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் இருதய மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் இருதய மேல்நிலைப் பள்ளியில் மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு, மாணவா்கள் மரக்கன்றுகளை புதன்கிழமை நடவு செய்தனா்.

மரம் தங்கசாமி நினைவு நாளான செப்.16-ஆம் தேதி மரங்கள் நடுவதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில், டிம்பா் மரங்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவா் மரம் தங்கசாமி. தனது வாழ்நாள் முழுவதும் டிம்பா் மர சாகுபடியை பிரபலப்படுத்தியவா்.

மரம் சாா்ந்த விவசாயம் காலத்தின் கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி, விவசாயிகளை மரம் சாா்ந்த விவசாயத்துக்கு மாற்றியவா். அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், காவிரி கூக்குரல் அமைப்பின் மூலமாக தமிழகத்தில் 1.20 கோடி மரக் கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 39,37,000 மரங்கள் நடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டிம்பா் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

மரக்கன்றுகளைப் பெற, மண்ணுக்கேற்ற மரங்கள் குறித்த ஆலோசனைகள் பெற, காவேரி கூக்குரல் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்க 80009 80009 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என காவிரி கூக்குரல் அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments