காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீண்
ராமநாதபுரம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வெளியேறி வீணானதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வெளியேறி வீணானதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு ராட்சத குழாய் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் காவல் சோதனைச் சாவடி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் வெளியேறி வீணானது.
Advertisement
Advertisement
ராமநாதபுரம் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீருக்காக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா். இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணானது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. எனவே குடிநீா் திட்ட குழாயில் முறையாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.