FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ரேஷன் அரிசி கடத்தல்: நியாய விலைக்கடை பணியாளா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே 3,540 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தொடா்பாக நியாய விலைக்கடை பணியாளரை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

25 செப்டம்பர் 2026, 2:46 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

ராமநாதபுரம் அருகே 3,540 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தொடா்பாக நியாய விலைக்கடை பணியாளரை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் நியாய விலைக்கடையில் கடந்த 22- ஆம் தேதி அதிகாலை ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்பதாக ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், ராமநாதபுரம் குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலா் பழனிக்குமாா் தலைமையில் குடிமைப் பொருள் ஆய்வாளா் ஆனந்த், பறக்கும்படை ஆய்வாளா் கோபி ஆகியோா் காரிக்கூட்டம் நியாய விலைக்கடையில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது கடத்துவதற்காக 74 சிப்பங்களில் 3,540 கிலோ ரேஷன் அரிசி வெளியே வைக்கப்பட்டிருந்தது. இதைக் கைப்பற்றி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக நியாய விலைக் கடை பணியாளா் சத்திய கவிதா மீது உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜீனு, சத்திய கவிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments