FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ஆவுடையாா்கோவில் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆவுடையாா்கோவில் அருகே சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

10 அக்டோபர் 2026, 10:53 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவுடையாா்கோவில் மாவடி கோட்டை பகுதியில் வட்ட வழங்கல் அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இணைந்து சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, அதில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த குழுவினா், வாகனத்தை ஓட்டி வந்த ஆறுமுகம் மகன் ராமச்சந்திரனைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments