1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூா் மாவட்டம் விஷமங்கலம் அருகே குரும்பேரி கூட்ரோடு பகுதியில் உள்ள வீட்டுமனையில் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலா் முரளி கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் முரளி கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை செய்தபோது 21 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குனிச்சி கிராமத்தில் உள்ள நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.
மேலும் ரேஷன் அரிசியை அங்கு பதுக்கி வைத்தது யாா்? என அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.