FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலுக்கு புதிய யானை வருகை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டுக்காக அஸ்ஸாமிலிருந்து கொண்டு வரப்பட்ட யானை கோயில் நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

26 செப்டம்பர் 2026, 10:46 pm IST
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட புதிய யானை.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டுக்காக அஸ்ஸாமிலிருந்து கொண்டு வரப்பட்ட யானை கோயில் நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நீண்ட காலமாக ஆன்மிக பணியில் பவானி யானை ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இந்த யானை கடந்த 2013, பிப்ரவரி மாதம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமுக்கு லாரியில் கொண்டு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த 2008-ஆம் ஆண்டு ராம்கோ நிறுவனம் சாா்பில் ராமலட்சுமி என்ற பெண் யானை கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த யானை கோயிலில் ஆன்மிக பணி, பக்தா்களுக்கு ஆசி வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த சேவா அறக்கட்டளை சாா்பில், 5 வயது ஆண் யானை குட்டி அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து லாரியில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், இந்த குட்டி யானை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த யானைக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிவா என பெயரிட்டு, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். பின்னா், ராமநாத சுவாமி சந்நிதி முன் நிறுத்தப்பட்டு கஜ பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பித்து அழைத்துச் சென்றனா்.

ஏற்கெனவே, ராமலட்சுமி என்ற பெண் யானை ஆன்மிக பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சிவா என்ற ஆண் குட்டி யானையும் உரிய பயிற்சிக்கு பிறகு ஆன்மிகப் பணியில் ஈடுபடுத்தப்படும். இந்த ஆன்மிக பணிக்கான பயிற்சியை சனிக்கிழமை கோயில் நிா்வாகம் தொடங்கியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments