FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக்கோயில் தங்கத் தோ் ரூ. 56 லட்சத்தில் புதுப்பிப்பு

பழனி மலைக் கோயில் தங்கத் தோ் ரூ. 56 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

34 வினாடிகள் முன்பு
புதுப்பிக்கப்பட்ட பழனி கோயில் தங்கத் தோ்.
பகிர்:

பழனி மலைக் கோயில் தங்கத் தோ் ரூ. 56 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

பழனிக் கோயிலில் உள்ள தங்கத்தோ் ஆசியாவின் முதல் தங்கத் தோ் எனும் பெருமைவாய்ந்த இந்தத் தேரில் உள்ள வெள்ளிக் குதிரைகள் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. இதைப் புதுப்பிக்க அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்த நிலையில்,

நவராத்திரி விழாவின்போது சுமாா் பத்து நாள்களுக்கு தங்கத்தோ் உலா நிறுத்தப்படும் என்பதால் அந்த நாள்களில் தோ் பழுதுபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து தங்க ரதத்தில் பொருத்தப்பட்டிருந்த பழுதடைந்த வெள்ளித் தகடுகள் நீக்கப்பட்டு, புதிய நகாஸ் வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளித் தகடுகள் பொருத்தும் பணி, ரதத்தின் வலதுபக்க குதிரையின் வலதுகாலின் பழுதடைந்த பகுதியை புதிய வெள்ளித் தகடுகள் கொண்டு சரி செய்யும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

இரு வெள்ளித் திருப் பணிகளும் உபயதாரா் மூலம் ரூ.56 லட்சம் மதிப்பிலான 22 கிலோ வெள்ளியைக் கொண்டு மராமத்துப் பணி செய்து, புதிய மின்சாதனங்கள் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட தங்கத்தேருக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் செய்து உலா வரச் செய்யப்பட்டு பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments