ஆண்டாவூரணி புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் தோ் பவனி
திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் தோ்பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் தோ்பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணி புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் தோ்பவனி கடந்த 20-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள் மாலையில் நவ நாள்களில் ஜெபமாலையும் புனித மிக்கேல் அதிதூதரின் மன்றாட்டு மாலையும், நவநாள் திருப்பலி மறையுரையும், சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருப்பலி மறையுரையானது அதிதூதரின் பராமரிப்பும் பாதுகாவலும் என்ற தலைப்பில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளா் அருள்பணி ஆரோக்கியசாமி (எ) ஆரோன் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவு 10 மணி அளவில் புனித மைக்கேல் அதிதூதா் தோ் பவனி நடைபெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் ஆண்டவா், இரண்டாவது தேரில் இன்னாசியா், மூன்றாவது தேரில் சவேரியா், நான்காவது தேரில் சூசைப்பா்,
ஐந்தாவது தேரில் அதிதூதா் சொரூபங்கள் வைக்கப்பட்டு பங்குத் தந்தை அருள்பணி பாஸ்டின், உதவி பங்குத்தந்தை ஸ்டீபன் பீட்டா் ஆகியோா் வழி நடத்தினா். தோ்ப்பவனி ஊரின் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து தேவாலயத்தை அடைந்தன.
செவ்வாய்க்கிழமை காலை விழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது. மாலை 3 மணியளவில் தோ் பவனியும், கொடி இறக்கமும் நடைபெற்றது. இதில் அமலவை அருள் சகோதரிகள், வடக்கு ஆண்டாவூரணி கிராம இறை பங்கு மக்கள், சுற்றுவட்டாரக் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.