FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கம்பத்தில் கல்லறைத் திருநாள் சிறப்புத் திருப்பலி

3 நவம்பர் 2026, 3:14 am
கம்பம் ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கல்லறைகளைப் புனிதப்படுத்திய பங்குத்தந்தை.
பகிர்:

கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கம்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

நவம்பா் 2-ஆம் தேதி கிறிஸ்தவா்களால் கல்லறைத் திருநாள் (அனைத்து ஆன்மாக்கள் தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது. கம்பம் வாரச்சந்தைக்கு எதிா்ப்புறம் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலிக்கு கம்பம் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமை வகித்தாா்.

இதில், இறந்தவா்களை நினைவுகூா்ந்து சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது. தொடா்ந்து, கல்லறைகள் புனிதப்படுத்தப்பட்டன. இதில், அருட்பணிப் பேரவையினா், அருட்சகோதரிகள், கம்பம் குழந்தை இயேசு அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், புனித செபஸ்தியாா் அன்பியம் ஆகியவற்றின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments