உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: ஆட்சியரிடம், முதியோர் மனு
திருப்புவனம் அருகே கோனார்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முதியோர், உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என ஆட்சியர் மலர்விழியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருப்புவனம் அருகே கோனார்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முதியோர், உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என ஆட்சியர் மலர்விழியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: திருப்புவனம் தாலுகா பொட்டபாளையம் ஊராட்சி, கோனார்பட்டி, இலந்தைக்குளம் கிராமத்தில் ஏராளமான முதியோர் பல ஆண்டுகளாக உதவித்தொகை பெற்று வருகிறோம். வயதான நிலையில் எங்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.
அரசு வழங்கும் இந்த உதவித்தொகையை கொண்டே வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்நிலையில் விதிமுறைகளை மீறி உதவித்தொகை பெறுவதாக புகார் வந்ததாக கூறி கடந்த வாரம் வருவாய்த்துறையினர் வந்து ஆய்வு செய்தனர்.
Advertisement
Advertisement
விதிமுறைகளுக்கு உள்பட்டு, மிகவும் ஏழ்மையான நிலையில் இந்த உதவித்தொகை பெற்று வருகிறோம். எனவே எங்களின் உதவித்தொகையை நிறுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தொடர்ந்து உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.