மருத்துவத்துறையில் டெக்னீசியன் பணியிடம்: பதிவு மூப்பு அறிந்து கொள்ள நாளை கடைசி
மருத்துவத்துறையில் டெக்னீசியன் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் டெக்னீசியன் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் கூறியது: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வுவாரிய உறுப்பினர் செயலரால் அறிவிக்கப்பட்டுள்ள 12 எலக்ட்ரோ என்செப்பலோகிராபிக் டெக்னிஷியன்(இஇஜி) மற்றும் இஎம்ஜி டெக்னிஷியன் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. இப்பணிக்கு, பள்ளி மேனிலை கல்வித்தகுதியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும், மருத்துவக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்வி நிறுவனங்களில் அல்லது மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் ஓராண்டு இஇஜி, இஎம்ஜி தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 01.07.2015 தேதியில் குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்றுகளுடன் புதன்கிழமை (செப்.16) சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு மூப்பை அறிந்து கொள்ளலாம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.